1.3.10

ஈரம்



தென்றல் வருடியதும் உதிரும்
பவளமல்லி போல உன் மரணம்.

தொட்டுச் சென்ற அலைகளுக்குக் கீழே
விட்டுச் சென்ற உன் சுவடுகள்.

பெருக்கித் தெளித்த முற்றத்தின்
அடித்தட்டுக்களில் புதையுண்டு கிடந்தது
நீ இட்ட மணக்கோலம்.

இறந்து போயிருந்த வீணையின் தந்திகளில்
சிந்திக் கிடந்தது ஸ்ரீ ராகம்.

நாவின் சுவை நரம்புகளில்
மயங்கிச் சலித்தது அக்கார வடிசலின்
அதிமதுரச் சுவை.

வெண் பட்டுப் புடவையின் தலைப்பில்
காய்ந்து வாடியிருந்தது உன் நாணத்தின் மீதி.

ஊஞ்சல் அசைகையில் மார்கழி புலர்கையில்
மருதாணி உதிர்கையில்
என் தோள்களில் உணர்கிறேன் உன் கரங்களை.

1 கருத்து:

பத்மா சொன்னது…

இது போல என் அம்மாக்கு நான் எழுதிருக்கேன்

ரொம்ப touching

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...