6.5.10

என் வயோதிகத்தில் குடும்பத்துக்கு ஒரு கவிதை-பை ஜுயி


இப்போது வயது
எழுபத்திஐந்து.
உதவித்தொகைப் பணம்
ஐம்பதாயிரம் செலவழிக்க
இருக்கிறது. என் அருகே
வயதான மனைவி
இருக்கிறாள்.
மிக உன்னதமான கஞ்சியையும்
புதிய சாதத்தையும் சாப்பிட்டபடி
சுற்றி இருக்கிறார்கள் என்
மருமகன்களும் மருமகள்களும்.
என் வீடு சாதாரணமாக இருந்தாலும்
நான் என்னுடைய புதிய ஆடையை
அணிந்திருக்கிறேன்.
என் முழுக்குடும்பமும் என் பக்கமிருப்பது
என் பாக்யம்.
அந்த சாதாரணமான திரைக்குப் பக்கத்தில்
என் படுக்கை மாற்றப்பட்டிருக்கிறது.
என் சிறிய உஷ்ண அடுப்பு நீலத்திரைக்கு
முன்னால் நிற்கிறது இப்போது.
ஒரு பேரன் என்னிடம் ஏதோ வாசிக்கிறான்.
இளம் சமையல்காரன் சூப் தயாரிக்கிறான்.
என் நண்பர்கள் அனுப்பியிருந்தவற்றிற்கு
பதிலாக நான் கவிதைகள் எழுதுகிறேன்.
சில வேளைகளில் மருந்துப் பணத்திற்காக
ஆடைகளை அடகு வைக்கிறேன்.
இந்தச் சிறிய காரியங்களையெல்லாம்
செய்து முடித்தான பின்
சூரியனுக்கு என் முதுகைக் காட்டியபடி
படுத்துறங்குவேன்.

4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி....குழப்பம்.
பாதிக்கவிதை வரை பணம் இருந்தது.மீதிக் கவிதையில் பணம் முடிந்த நிலையா ?புரிதல் சரியா ?

குழந்தைநிலாவுக்கு வாங்கோ.

சுந்தர்ஜி சொன்னது…

நீங்கள் சுத்தமான வரவு-செலவுக்காரரோ? எல்லாமிருந்தும் எதுவுமில்லாத நிலை எப்பவுமே வரும்.ஆரம்பத்தில் ஒரு விதமும் இறுதியில் மறு விதமும்.தவிர அதுதான் பை ஜூயியின் இறுதிக் கவிதையும் கூட.
குழந்தை நிலாவுக்கும் வந்தேனே.

இரசிகை சொன்னது…

nallaayirukku.........

சைக்கிள் சொன்னது…

எவ்வளவு அமைதி? எவ்வளவு ஏற்பு? எவ்வளவு வெளிச்சம்! நன்றி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...