16.6.10

லயம்

அந்த வனத்தில் என் முன்னே ஒரு நதி.
பிரவாகமாய்ப் படர்ந்து கிடக்கக் காத்திருந்தேன்
என் கவிதையின் முதல் வரிக்காய்.

மொட்டவிழ இருக்கும் தாமரை.
நீரில் பாதம் பதியாது தத்தும் ஓட்டாஞ்சில்.
கொக்கிப் புழு ஈர்க்காத மீன்களின் சுதந்திரம்.

வானில் சுவடுகளை அழித்துச் செல்லும் சிறகுகள்.  
மேய்ப்பனோடு திரும்பும் ஆடுகளின் தோல்மணம்.
யாரோ இசைக்கும் சோகம் கசியும் ஆலாபனை.

மறுபடியும் நதியின் நீரைப் பார்த்து நிற்கையில்
நினைத்துக் கொண்டேன்-
கவிதையின் முதல்வரி
பரவசமும் நெகிழ்ச்சியும் தரும்
இந்தப் பேரமைதியாக இருக்கட்டும் என.

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

இத்தனை பரவசத்திற்குள்ளும் கவிதையின் முதல் வரி
ஞாபகத்தில் இருந்ததா சுந்தர்ஜி !

சுந்தர்ஜி சொன்னது…

முதல் வரியே எழுதப்படாத பரவசம்தானே ஹேமா.எப்படி மறக்கும்?

Madumitha சொன்னது…

தண்ணீரில் தத்திச் செல்லும்
ஓட்டாஞ்சில்லைப் போல்
கவிதை மனசுக்குள் தத்தி தாவுகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மது.

சைக்கிள் சொன்னது…

வாழ்க்கையின் பரவசங்கள் எத்தனை! ஒருவித மனோலயத்தை ஏற்படுத்துகிற வரிகள். கவிதை தரும் மகிழ்ச்சிக்கும், 'வீடு பேறு' கவிதைக்குத் தளத்தில் இடம் கொடுத்ததற்கும் உங்களுக்கு என் நன்றி!

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி தோழி.மனோலயத்தை என் கவிதை உங்களுக்களித்திருக்குமானால் நான் பாக்கியவான்.நல்ல கவிதைகளின் இடம் அவற்றாலேயே நிறைக்கப்படுகின்றன.உங்கள் ”வீடு பேறும்” அப்படித்தான்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...