25.6.10

கயிற்றரவு



கழிகளுக்கிடையே காற்றில் ஆடுகிறது
பசியின் ஓவியம்.
துவளும் கால்களைத் துரத்துகிறது
என்றோ உண்ட சோற்றின் மணம்.
காத்திருக்கிறது
பழகிப்போன ஏமாற்றத்தின் புளித்த நெடி.

5 கருத்துகள்:

Madumitha சொன்னது…

பசி
வறுமை கோட்டுக்கு
மேலே
நடக்கிறதா?

பத்மா சொன்னது…

பசியின் ஓவியம் ....

வெறுக்கத்தக்க அழகிய உண்மை

நிதர்சனம் மனதை தைக்கிறது ..

இதை நினைத்தால் நம் சாப்பாட்டு ரசனை கொஞ்சம் வெட்கமாய் தான் இருக்கு இல்ல சுந்தர்ஜி?

Matangi Mawley சொன்னது…

cha! Should I say beautiful? I don't know! Sometime back.. When Chennai sangamam was going on, a group of artists came and performed at my office. That was the first time I was actually seeing them.. I had always wanted to.. heard so much about the 'sangamam' earlier! but strangely- I couldn't enjoy it in the way I thought I would.. I felt sad seeing them do those things.. Little girl, about 7 or 8 showing tricks with sword and all- I felt very sad!

That's what I remembered when I read this!

I know it's not apt here.. but for your words.. Beautiful!

PS: I know.. Many people.. my father too, don't approve of me writing comments in english for a tamil post! But sometimes.. I express things more comfortably in english.. Please bear with me..

ஹேமா சொன்னது…

நிதர்சங்களை ரசித்தாலும் சகிக்கமுடிவதில்லை.
ஆனால் தீர்வு ?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மது.துவள்கிறது கோட்டிற்கு மேலே.

நன்றி பத்மா.வெட்கமாய்த்தான் இருக்கு நாக்கின் நீளம்.

நன்றி மாதங்கி.மொழி எதுவானால் என்ன?கயிற்றின் மேல் நடக்கும் அந்தக் குழந்தையின் பசியை எந்த மொழியில் எழுத?

நன்றி ஹேமா.தீர்வுகளைக் காலம் கையில் வைத்திருக்கிறது தோழி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...