1.10.10

ராட்டினம்



நிரம்பி வழிகிறது
சூதுகள் ததும்பும்
உபாயங்களின் கோப்பை.
மூடிக் கிடக்கிறது
ராஜா ராணி கோமாளியுடன்
முடிவுகள் பதுக்கப்பட்ட
ரகசியக் கோட்டை.
இற்ற கயிற்றில் தொங்குகிறது
நம்பிக்கையின் மண்கலயம்.
கரைந்தோடுகிறது
காலத்தின் கம்பளங்களில்
சந்தர்ப்பங்களின் உப்பு.
தூவப்படுகிறது
தோற்றவனின் கண்களில்
உபாயங்களின் பொடியும்,
வென்றவனின் பாதையில்
வியூகங்களின் மலர்களும். 
புன்னகைக்கிறான் கோமாளி
வென்றவன் தோற்றவன் பேதமின்றி
ராட்டினத்தின் சாறு பருகியபடி.

6 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

//புன்னகைக்கிறான் கோமாளி
வென்றவன் தோற்றவன்
பேதமின்றி
ராட்டினத்தின் சாறு பருகியபடி.//
நிறைய யோசிக்க வைத்த வரிகள்.பொதுவாக காலம் என்று வருகிற இடத்தில் கோமாளியை உருவகித்திருப்பது சிறப்பு. நம் ஆட்டத்தில் நாமே கோமாளி ஆனால் பக்குவம் பெறலாம் என்ற எண்ணத்தை மீண்டும் எழுப்பியது.பிரமாதம்!

பத்மா சொன்னது…

ராட்டினம் தான் ..வாழ்வே... இல்லையா ஜி? எல்லாமே இதில் உண்டு தானே ? நாமும் இங்கிருப்போம்

நிலா மகள் சொன்னது…

//இற்ற கயிற்றில்
தொங்குகிறது
நம்பிக்கையின் மண்கலயம்.
கரைந்தோடுகிறது
காலத்தின் கம்பளங்களில்
சந்தர்ப்பங்களின் உப்பு.
தூவப்படுகிறது
தோற்றவனின் கண்களில்
உபாயங்களின் பொடியும்,
வென்றவனின் பாதையில்
வியூகங்களின் மலர்களும்.//

வாழ்வியல் கோப்பையின் நவரசச் சாறினை துளித்துளியாய் ... இலாவகமாய் ரசித்து ருசிக்க முடிகிறது தங்கள் கவிதைகள் வாயிலாய். நன்றி ஜி

Vel Kannan சொன்னது…

அருமை ஜி
//வென்றவன் தோற்றவன்
பேதமின்றி//
இந்த நிலை எந்த நடுநிலையனுக்கும் வருவதில்லை.
காலம் என்ற கோமாளியை தவிர

ஹேமா சொன்னது…

வாழ்வை இராட்டினமாக்கி நாங்கள் நடிக்கும் காட்சிகளையும் கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள் சுந்தர்ஜி !

Madumitha சொன்னது…

கீழிருப்பவன் மேலுயருவான்
என்ற சாத்யத்தை நிரூபிக்கும்
ஒரே சாதனம் ராட்டினம்
என்பதுதான் தொண்டையின் முள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...