1.5.12

யாருமற்ற ஓர் அறை.



யாருமற்ற ஒரு அறையின் தனிமையைப் போல்
குரூரமான ஆயுதம் எதுமில்லை.

யாருமற்ற ஒரு தெருவின் நிசப்தத்தைப் போல்
இரைச்சலானது எதுவுமில்லை.

யாருமற்ற மனங்களின் துயரைப் போல்
சீழ்வடியும் காயங்கள் எதுவுமில்லை.

எல்லாம் நிறைந்திருத்தல்
ஏதொன்றையும் மறக்க வைக்கிறது எனில்

எதுவுமற்றிருத்தல்
எல்லாவற்றையும் நினைக்க வைக்கிறது.

8 கருத்துகள்:

Ramani சொன்னது…

யாருமற்ற தனிமையின் சோகத்தை
மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும் பதிவு அருமை
வாழ்த்துக்கள்

Kuppu Veeramani சொன்னது…

வார்த்தைகளற்று,பேரிரைச்சலும் கனத்த மௌனமும் உணரச்செய்த வித்தை.சிறப்பு,பாராட்டு.

G.M Balasubramaniam சொன்னது…

சுந்தர்ஜி, நீங்கள் வரிசை படுத்தி உள்ள
எல்லாவற்றுக்கும் எதிர்மறைகளும் பொருந்தும் என்று எனக்குத் தோன்றுகிறது.எல்லோரும் இருக்கும்போதும் உணரும் தனிமை, இரைச்சலான தெருவிலும் உணரும் நிசப்தம், எல்லாம் இருந்தும் இல்லாத உணர்ச்சி, இருப்பது எல்லாம் இல்லாததை நினைக்க வைப்பது.....நான் என்ன செய்ய.? படித்ததும் தோன்றியதை எழுதி விட்டேன்.

Nagasubramanian சொன்னது…

fantastic Sundharji.
Some of your poems were published in Ananda vikatan, right?
Congrats for that too :)

மீனாக்ஷி சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது.
G.M.B. அவர்களின் கருத்து பிரமாதம். மனதை தொட்டது.
வாழ்வில் நிறைவை கண்டுவிட்டால் இனிது இனிது ஏகாந்தமே இனிது.

சக்தி சொன்னது…

நிறைந்திருக்கையில் மறந்திருப்பவை
இழந்திருக்கையில் நினைவிலாடும்.
பாராட்டுக்கள்

கோவை மு.சரளா சொன்னது…

வரிகளில் வடிகிறது ஒரு நிசப்தத்தின் பேரிரைச்சல் ..............வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//எதுவுமற்றிருத்தல்
எல்லாவற்றையும் நினைக்க வைக்கிறது.//

உண்மை.... எனக்கும் இவ்வனுபவம் உண்டு!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...