1.10.12

குளக்கரை



















1.நான் அமர்ந்திருக்கும்
ஒரு குளக்கரையின்
யாருமற்ற தனிமையை
விடவும்-
வேறெந்தக் கவிதையை
எழுதிவிடப் போகிறேன் அழகாய்?

2.வீசப்பட்ட கற்களையும்
வெளிப்படுத்தாத சலனங்களையும்
தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது
இந்தக் குளம்.

3.மீன்களைப் பிடிக்கவோ
துணிகளைத் துவைக்கவோ
யாரும் வருவதில்லை.
-என்றாலும்
அன்பு ததும்பும் தன் பாடலை
உரக்கப் பாடியபடியே இருக்கிறது
யாரும் பாராத குளம்.

4.பார்வை அற்றவனின்
கனவு.
பேச இயலாதவனின்
பாடல்.
நிலவற்ற- மீன்களற்ற-
யாருமற்ற குளம்.

5 கருத்துகள்:

vasan சொன்னது…

//யாரும் வருவதில்லை.
-என்றாலும்
அன்பு ததும்பும் தன் பாடலை
உரக்கப் பாடியபடியே இருக்கிறது
யாரும் பாராத குளம்.//

இந்த‌ வ‌ரிக‌ளின் வேர், கீழேயுள்ள‌, இந்த‌ வ‌ணிக‌வ‌ளாக‌த்தின் ம‌ண்ணிலிருந்து ப‌றித்து வ‌ர‌ப்ப‌ட்ட‌தா சுந்த‌ர்ஜி?

/தன்னை யாராவது கவனிக்கிறார்களா இல்லையா என்றோ, இதற்காகத் தனக்குத் தரப்படவுள்ள சன்மானத்தைக் குறித்தோ கூட அக்கறையின்றி, தன்னின் மிகச் சிறந்த இசையை இசைத்துக்கொண்டிருக்கும் அவன் ஆன்மாவில், அவன் கைகளில் கடவுள் நிறைந்திருந்தார்...... . இதுவே தன் விதி, தன் ஆனந்தம், தன் வாழ்தலுக்கான காரணம் என்பது போல இசைத்துக்கொண்டிருந்தான்./

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகு, பொறுமை, ஏக்கம், சோகம் என சொல்கிறதோ.....குளம்...?

அப்பாதுரை சொன்னது…

குளத்தைப் போலிருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினேன்.

சக்தி சொன்னது…


யாரும் வாராதபோதும் ஒரு இலை விழும் குமிழில்
சிரிக்கிறதாமே அந்தக் குளம்

ஆ.செல்லத்துரை. சொன்னது…

மெளனம் என்பது அமைதியல்ல ஒருபோதும்.குளத்தின் ஆழங்களில் அலைகிறது அது சொல்லமுடியாத சொற்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...