17.2.14

கவிதையின் இறுதி வாக்கியம்.

"கிழித்துப் போட்டு விடுங்கள் இதுவரை படித்துவிட்ட இந்தக் கவிதையை ஒரு புன்சிரிப்புடன்." நீங்கள் படித்துக் கடக்கும் இந்த முதல் வாக்கியம் உண்மையிலேயே ’இறுதி வாக்கியமாய் இருக்கட்டும்’ என நான் எடுத்து ஒதுக்கி வைத்ததுதான். உங்களுக்கு இது வினோதமாய் இருக்கலாம். -ஒரு புத்தகத்தை இறுதிப் பக்கத்திலிருந்து வாசிக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் -அல்லது முதலில் பரிமாறப்பட்ட மிகப் பிடித்த இனிப்பை இறுதியில் சாப்பிட எடுத்து வைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இது ஒன்றும் பெரிய வியப்பாய் இருக்க முடியாது. ’ஏறுபவர்களும் இறங்குபவர்களும் தீர்மானிக்கும் ஒரு மாடிப்படியின் முதலும் இறுதியுமான படிகள்’ என்ற இறுதி வாக்கியமும் அல்லது ’ஒரு செலாவணியாகும் நாணயத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தல் போல’ என்றெழுதப்பட்ட இந்த வாக்கியமும் என் இரு கவிதைகளின் இறுதி வாக்கியம்தான். எனக்கு ஒரு கவிதையின் இறுதி வாக்கியம் போதும் முழுக் கவிதையின் நுனி அகப்பட. இந்த வினோதமான பழக்கத்தின் நிழலில் இந்தக் கவிதையின் நுனி உங்களுக்கு அகப்படாவிட்டால் பரவாயில்லை. "கிழித்துப் போட்டு விடுங்கள் இதுவரை படித்துவிட்ட இந்தக் கவிதையை ஒரு புன்சிரிப்புடன்."

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
கவிதையின் வரிகள் மதை நெருடியது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

எங்கேனும் சிறு கிழிசல் தென்பட்டாலும் (தென்படவில்லை) ஒட்டி பாதுகாப்பேன் இக்கவிதையை இன்னும் கூடுதலாக.. வரிகள் தோறும் விளையாடியிருக்கிறீர்கள் சுந்தர்ஜி சார். அற்புதமான கவிதை..!

இளமதி சொன்னது…

வணக்கம் ஐயா!

இன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்களைக் கண்டு வந்தேன்!

என்னவெனச் சொல்ல என் உணர்வுகளை!...

அற்புதம்! பிரமித்துவிட்டேன் ஐயா!
மனத்தினுள் புகுந்து ஒட்டிக்கொண்டது. அவ்வளவே!

இதற்குமேல் எழுத எனக்குத் தெரியவில்லை!
வாழ்த்துக்கள் ஐயா!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...